முதல்முறையாக கதையின் நாயகியாக அக்ஷரா ஹாசன் ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அக்சராஹாசனுடன், பாடகி உஷாஉதுப் , மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் என பெரிய கூட்டமே நடித்து வருகிறது.
இப்படம் குறித்து அதன் இயக்குநர் ராஜா ராமமூர்த்தி கூறுகையில், “அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு’ என்ற பண்பாட்டை பின்பற்றும் ஆச்சாரமிக்க ஒரு குடும்பத்தில் பிறந்த 19 வயது பதின் பருவ பெண், அவளது தற்கால நாகரீக உலகிற்குள்ளும், பண்பாட்டு அடையாளத்திற்குள்ளும் சிக்கி தவிப்பதை கூறும் கதையாகும்.
‘ஒரு நல்ல பெண்’ என்பதற்கு சமூகம் விதித்திருக்கும் கட்டளைகள், அவளை எப்படி பாதிக்கிறது என்பதே இக்கதையின் மையம்.
தற்போது வெளியாகியுள்ள இந்த டீசர்,கதையின் நாயகியான பவித்ரா சந்திக்கும் பல்வேறு பிரச்சனையின் வடிவங்களை காட்டுவதாக இருக்கும். படத்தின் டிரெய்லர் இந்த டீஸரில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்வதாக இருக்கும். அடுத்து வரும் இப்படத்தின் டிரைலரின் முன்கதை சுருக்கமே தற்போது வெளியாகியுள்ள டீசர். நாங்கள் எதிர்பார்த்ததைவிட இப்படத்த்தின் டீசருக்கு கிடைத்து வரும் வரவேற்பு ஒட்டு மொத்த படக்குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது” என்கிறார்.