மலையாளத்தில் வெளியான திரிஷ்யம்’ படத்தை தொடர்ந்து மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணிமீண்டும் ‘ராம்’ படத்துக்காக இணைந்தது.
ஆனால், கொரோனா லாக் டவுனால் , திட்டமிட்டபடி வெளிநாட்டுப் படப்பிடிப்புக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
‘ராம்’ படத்துக்கு முன்னதாக குறுகிய கால படைப்பாக, மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் ‘த்ரிஷ்யம் 2’ம்பாகம் அறிவிக்கப்பட்டது . இதில்,மோகன்லாலுடன் மீனா, இவர்களது மகள்களாக நடித்த அன்ஷிபா ஹாசன், எஸ்தர் அனில், போலீஸ் அதிகாரியாக நடித்த ஆஷா சரத், அவரது கணவராக நடித்த சித்திக் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் அதே கதாபாத்திரங்களில் தொடர்கிறார்கள்.
கதாசிரியரும் வில்லன் நடிகருமான முரளி கோபி, நடிகரும் எம்.எல்.ஏ. வுமான கணேஷ்குமார், நடிகர் சாய்குமார், நடிகை அஞ்சலி நாயர் என முக்கியமான பிரபலங்கள் இந்தப்படத்தில் புதியவர்களாக இணைந்துள்ளனர்.
இதுதவிர முக்கியமான போலீஸ் கதாபாத்திரம் ஒன்றில் தமிழ் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர முக்கியமான போலீஸ் கதாபாத்திரம் ஒன்றில் தமிழ் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
படப்பிடிப்புக் கு வசதியாக படக்குழுவினர் அனைவரும் அரசின் வழிகாட்டுதலின்படி தனிமை படுத்திக்கொண்டனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி அன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கிதொடர்ந்து நடந்து வருகிறது.
படப்பிடிப்பு தொடங்கி இதுவரை மோகன்லால் காட்சிகளே படமாக்கப்படாத நிலையில், தற்போது ‘திரிஷ்யம் 2’ படப்பிடிப்பில் இணைந்துள்ளார் மோகன்லால். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோகன்லால் கூறியுள்ளதாவது, ”கோவிட் -19க்கான அனைத்து விதமான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுடனும் ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பில் இணைந்துள்ளேன்” இவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.