நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி பிக் பாஸ் 4 துவங்கும் என அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகைகள் ரம்யா பாண்டியன், கிரண், ரேகா,சின்னத்திரை நடிகை ஷிவானி, நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ரியோ ராஜ், ஆரி, அணு மோகன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதே போல் நடிகை
லட்சுமி மேனனும் இதில் ஒரு போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக பரவலாக பேசப்பட்டும் வருகிறது. இது குறித்து நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,.
” நான் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை . நான் ஒன்றும் அடுத்தவர்கள் பயன்படுத்தும் சாப்பாட்டு தட்டு ,மற்றும் கழிவறையை சுத்தம் செய்ய மாட்டேன். நிகழ்ச்சி என்ற பெயரில் கேமராவுக்கு முன்னாடி, சண்டை போட்டுக்கிட்டு இருக்கிற ஒரு ஷோவில் நான் கலந்துக்கமாட்டேன். இப்ப இல்லை, எப்பவுமே! இதற்கு பிறகாவது,இந்த மாதிரியான குப்பையான நிகழ்ச்சியில் நான் இருக்கிறேன் என்ற ஒரு எண்ணத்துக்குள் யாரும் வராதீர்கள்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.லட்சுமி மேனனின் இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.