பாலிவுட்டை ஆட்டிப்படைத்து வருகிறது போதைப்பொருள் விவகாரம்.
நடிகை ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் உட்பட 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பிரபல பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத்சிங் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியது. இவர்களில் ரகுல் ப்ரீத் சிங் நேற்று விசாரணைக்கு ஆஜராகி 4 மணிநேரம் அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.
மேலும் தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரதா கபூர் ஆகியோர்போதைப் போருள் தடுப்புப் பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகினர்.
இந்நிலையில் நடிகரும் தீபிகாவின் கணவருமான ரன்வீர் சிங்கிடமும் என்சிபி விசாரணை நடத்தவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இது குறித்து போதைப் போருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,, ”சம்மன் அனுப்பிய யாரிடமிருந்தும் எங்களுக்கு எந்தவிதக் கோரிக்கையும் இதுவரை வரவில்லை. இன்று விசாரணைக்காக ஆஜராக ஒப்புக்கொண்டு அனுப்பப்பட்ட மெயிலே எங்களுக்குக் கடைசியாக வந்துள்ளது” என்றனர்