மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,”இசையுலகையும் தாண்டி பாடகர் எஸ்பிபி பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இந்திய அரசின் தேசிய விருதுகளை 6 முறையும், ஆந்திர அரசின் நந்தி விருதுகளை 25 முறையும் பெற்றுள்ள எஸ்பிபிக்கு, , 2011-ல் பத்ம விபூஷண் விருதையும் மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது.
இசை உலகின் ஜாம்பவான்களான லதா மங்கேஷ்கர், பூபேன் ஹசாரிகா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பிஸ்மில்லா கான், பிம்சென் ஜோஷி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கி அரசு பெருமைப்படுத்தி உள்ளதை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.இவர்களின் வரிசையில்,
இசை மற்றும் இலக்கியத்துக்கு அளவிட முடியாத அளவுக்கு பங்காற்றியுள்ள மிகப்பெரிய பாடகருக்கு புகழாஞ்சலி செலுத்த, அவருக்கு (எஸ்பிபி) பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசை வேண்டிக்கொள்கிறேன். எஸ்பிபியின் 50 ஆண்டுகால இசைப் பணிக்கும், நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்கவும், இந்த உயர்ந்த அங்கீகாரத்தை அளிக்க வேண்டும்”.இவ்வாறு ஆந்திரமுதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.