இது ஆந்திராவில் நடக்கிற சண்டை.!
அண்மையில் காலமான பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு ‘பாரத ரத்னா ‘விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
இது லேட்டஸ்ட் செய்தி. ஆனால் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் ‘பாரத ரத்னா ‘விருதினை முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவுக்கு வழங்கவேண்டும் என்கிற கோரிக்கையை வைத்திருக்கிறார்.
தெலுங்கு தேச கட்சி சும்மா இருக்குமா? சில வருடங்களுக்கு முன்னதாகவே அந்த உயரிய விருதினை மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி .ராமராவுக்கு கொடுத்தாக வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பி இருந்தது.
மூவருமே அந்த உயரிய விருதுக்கு உரியவர்கள்!ஆந்திராவின் மண்ணின் மைந்தர்கள். ஆனால் அரசியல் பார்வை எப்படி இருக்குமோ? ஒரே நேரத்தில் மூவருக்கு வழங்கலாம் என்பதற்கு முன்னுதாரணம் இருந்தாலும் ஒரே மாநிலத்தை சேர்ந்தோருக்கு வழங்கப்பட்டதில்லை.
எங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்களில் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று கேட்பதற்கு தமிழக அரசுக்கு தைரியம் கிடையாது. ஜெயலலிதாவுக்கு கொடு என்று கேட்கவும் முடியாது. அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி. 4 ஆண்டு ஜெயில் தண்டனை உச்ச நீதி மன்றத்தினால் விதிக்கப்பட்டவர் .கலைத்துறையை சேர்ந்த எத்தனையோ பேர் தகுதி பெற்றிருந்தாலும் அவர்களுக்கு கொடுங்கள் என்று கேட்க முடியாத அளவுக்கு அரசியல் இருக்கிறது.
( பாரத ரத்னா படம் உதவி; விக்கிபீடியா )