தங்களது முதல் தயாரிப்பாக ஶ்ரீதி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தை தயாரிக்கிறார். முகேன் ராவ் மற்றும் அனு கீர்த்தி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இயக்குநர் அஞ்சனா அலி கான் படம் குறித்து கூறியதாவது….
அனுகீர்த்தி வாஸ் தமிழ்நாட்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஒரே ஒரு பேரழகி. தான் இருக்கும் இடத்தை ஜொளிக்க வைப்பவர், கடும் உழைப்பாளி. படத்தில் அவரது நடிப்பை அனைவரும் பாராட்டுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். அவர் அழகும், திறமையும் கொண்டவர் மட்டுமல்ல, வெகு சரளாமாக தமிழ் பேசக்கூடியவர். அது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்றே கருதுகிறேன்.
மிகச்சிறந்த தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஒளிப்பதிவாளர் ராண்டி எனும் ரத்னவேலு மற்றும் ஆண்டனி ஆகியோருடன் 25 ஆண்டுகால பழக்கம் எனக்கு.
தற்போது மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கமலஹாசனின் “இந்தியன் 2 “ படத்திலும் பணியாற்றி வருகிறார். மிகப்பெரும் படங்களில் பணியாற்றும் அதே நேரம் கலைக்கு மதிப்பளித்து, தரமான சிறு படங்களிலும் பணியாற்ற தவறுவதில்லை அவர். வெகு சிறு பட்ஜெட் படமான குமாரி 21F தெலுங்கு படத்தில் பணியாற்றினார் அவர். ரஜினிகாந்த், மகேஷ்பாபு போன்ற பெரும் ஆளுமைகளுடன் பணிபுரியும் இடைவெளியில் இம்மாதிரியான சிறு படங்கள் செய்து, இன்றைய தலைமுறை ஒளிப்பதிவாளர்களுக்கு பெரும் முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் எங்கள் படத்தில் பணியாற்றுவது எங்களுக்கு பெருமை.
தமிழ் சினிமாவில் எடிட்டிங்கில் பல புதுமைகள் செய்து அசத்தியவர் ஆண்டனி. ஒரு ஷாட்டை வைத்து கதையின் பல முனைகளை மாற்றக்கூடியவர். அவருடான கதை விவாதம் பெரும் சந்தோஷம் தந்தது. திரையில் அவரது மேஜிக்கை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நிவாஸ் கே பிரசன்னா இன்றைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் மிகுந்த திறமை கொண்டவர். இசையின் பல பிரிவுகளிலும் எளிதாக பயணம் செய்து அசத்துபவர் அவர் எங்கள் படத்தில் இணைந்துள்ளது மகிழ்ச்சி.
அமித்தா ராம் எங்கள் குழுவில் இணைந்திருப்பது எங்கள் குழுவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் பலம். படத்தை பற்றிய அவரது நுண்ணிய விவரங்கள் ஆச்சர்யத்தை தருவதாக உள்ளது. தங்களது முதல் தயாரிப்பாக ஶ்ரீதி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தை தயாரிப்பது எங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுகிறது. “வெற்றி” திரைப்படம் இந்த அனைத்து நம்பிக்கைளும் பூர்த்தி செய்து பெரு வெற்றி பெறுமென நம்புகிறேன் நன்றி.”என்றார் .