“நீயா ,நானா என்கிற பல பரீட்சை அதிமுகவில் பகிரங்கமாகவே வெடித்திருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டுவதில் முதல்வர் எடப்பாடியார் துணிவுடன் இறங்கிவிட்டார் என்றே தெரிகிறது.
‘நிரந்தர முதல்வர் யானே ‘என்கிற முனைப்பில் எடப்பாடி பழனிசாமி ,’அடுத்த முதல்வர் நானே’ என்கிற நினைப்பில் ஓ.பன்னீர்செல்வம் என்கிற கனவுடன் வந்தவர்களுக்கு செயற்குழு சரியான போட்டி களமாக அமைந்திருந்தது. முடிவு எதுவும் எட்டாமல் அக்.7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்கிற முடிவுடன் சபை கலைந்தது.
இதனுடைய பின் விளைவுகள் அரசு நிகழ்ச்சிகளில் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது.
விழா அழைப்பிதழ்களில் ஓபிஎஸ் சை ஓரம் காட்டுகிற வேலை ஆரம்பமாகியிருக்கிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை துவங்கி வைக்கும் விழா தனியாட் பங்களிப்புடன் நடைபெறுகிறது. தனியார் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெயர் இடம்பெற்றுள்ளது.
ஆனால் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் இடம்பெறவில்லை.இதனால் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
ஆனால் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் இடம்பெறவில்லை.இதனால் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
என்ன செய்வது ?
மனோகரா வசனம்தான் நினைவுக்கு வருகிறது:
“ஆரம்பமாகிவிட்டது
அரூபத்தின் வேலைகள்.”