காரில் கடத்தி சென்று பிரபல கேரளா நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதான வழக்கில் நடிகர் திலீப் உள்பட பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் .சில வருடமாக இந்த வழக்கு நடந்து வருகிறது.முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி ,விபின்பால் இருவரில் விபின்பால் பிறழ் சாட்சியாகிவிட்டார்.
நடிகர் திலீப்புக்கு எதிராக ஏதாவது சாட்சியம் சொல்லாதிருந்தால் ஒரு வீடு ,சில லட்சங்கள் தருகிறோம்.ஆனால் எதிராக இருக்கும்பட்சத்தில் உன்னை கொன்னேபோடுவோம் “என்று நடிகர் திலீப்பின் ஆட்கள் போனில் ,தபாலில் மிரட்டுகிறார்கள் என்று போலீசில் புகார் செய்திருக்கிறார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்கிறார்கள்.