“வயசான ஹீரோக்கள் இளம்பெண்களுடன் நடிக்கிறத பார்த்தா அருவருப்பா இருக்கு”என்று முன்னாள் சாக்லேட் பாய் மாதவன் கூறி இருக்கிறார்.
இவரது பேச்சு உச்சநடிகர்களான கமல்ஹாசன் ,ரஜினிகாந்த் ஆகியோரின் ரசிகர்களை வெகுவாக உசுப்பிவிட்டிருக்கிறது.
மாதவன் சொன்ன பல கருத்துகள் கமல் ரஜினி இருவருக்குமே எதிரானதாகத்தான் இருக்கிறது. அவர் யாரையும் குறிப்பிட்டுசொல்லவில்லை , பொதுவான உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் என்றாலும் வயதான நடிகர்கள் அனைவருக்குமே பொருந்தக்கூடியதுதான். ஆனாலும் அதை வயதான நடிகர்கள் ஒத்துக்கொள்வதில்லை. ஒரு காலத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை கிழட்டு நடிகர் என்று ஒரு பத்திரிகை எழுதியது நினைவு இருக்கலாம்.
மாதவன் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?
“அரசியலுக்கு வரணும்னா ‘ரூல்’ பண்ணனும்னு வரக் கூடாது. ‘சர்வீஸ்’ பண்ணனும்னு வரணும்.அதுமட்டும் இல்லைங்க. தலைவனா மாறணும்னா, எல்லாத்தையும் விட்டுட்டு மக்களுக்காக மட்டுமே இறங்கி வரணும். அங்க ஒரு கால் இங்க ஒரு கால் வச்சிக்கிட்டு, நானும் அரசியல் பண்றேன் என மக்களை ஏமாற்றக் கூடாது. ஆக்சுவலா, நான் ஒரு லீடர் என்கிற எண்ணமே எனக்கு இல்லை. இப்படி சினிமாவை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு மக்களுக்காக வருவேனான்னும் தெரியல.” என்றார்.
“சில வயசான நடிகர்கள் இன்று வரை ஹீரோவாகவே நடித்து வரும் போது,இளம்பெண்களின் மனதில் இன்று வரை சாக்லேட் பாயாகவே இடம்பித்துள்ள நீங்கள் மீண்டும் ரொமான்ஸ் ஹீரோவாக நடிப்பது எப்போது?” என்கிற கேள்விக்கு மாதவன் பதிலளிக்கையில்,“இப்படி வெள்ளை தாடி, வெள்ளை முடி எல்லாம் வச்சிக்கிட்டு எப்படி ரொமான்ஸ் பண்றதுன்னு நானே என்னை கேள்விக் கேட்டுக்கிறேன்.டை அடிச்சிட்டு நடிக்கலாமே என்கின்றனர். ஆனால், வெளிய மட்டும் இல்ல உள்ளேயும் நரைத்து விட்டது என்று சொல்லி அனுப்பி வருகிறேன்.
தற்போது எனக்கேற்ற நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன்.சில ஹீரோக்கள் வயசான பிறகும் இளம் ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்வதை பார்த்தால் அருவருப்பாத் தான் இருக்கு'”என்கிறார் .
இவரது கருத்து நியாயமானதா இல்லையா?