Kodai Mazhai
Rating :
(2/ 5)
Directed by :Kathiravan
Casting :Kannan, Sri Priyanga, Mu.Kalangiyam, Imman Annachi
Music :Sambasivam
Produced by :YAZH THAMIZH THIRAI
Review
‘யாழ் தமிழ்த்திரை’ சார்பில் கே.சுரேஷ்குமார், அலெக்சாண்டர் இருவரும் இனைந்து தயாரித்துள்ள படம் ‘கோடை மழை’. பிரபு தேவாவின் உதவியாளர் கதிரவன் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் படம். சங்கரன்கோயில் சுற்று வட்டாரச் செவி வழி கேட்ட காவல் கதையினை காதல் (வலி) வழி சொல்லியிருக்கிறார் இயக்குனர். கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்த விதத்திலேயே சபாஷ் போடவைக்கிறார்.
பட்டாளத்தில் பணிபுரியும் வீரன் கண்ணன் விடுமுறை காலங்களில் தனது ஊருக்கு வரும் போது ஏற்படும் நிகழ்வுகளே திரைக்கதையாக திரையில் விரிகிறது. கண்டிப்பான இன்ஸ்பெக்டர் களஞ்சியத்தின் ஒரே தங்கை ப்ரியங்கா. வயதுக்கேற்ற வனப்புடன் ஊரைச்சுற்றிவரும் அவரை பார்த்தவுடன் காதல் கிறுகிறுப்பில் கிறங்குகிறார் பட்டாள வீரன் கண்ணன். சிற்சில சம்பவங்களுக்குப் பிறகு அவர்களின் காதல் பூக்கிறது. அவள் இல்லாத நேரத்தில் வானத்து நிலவையே அவளாக பார்த்து சிலாகித்துக்கொள்கிறான்.
எல்லாமே தனது தங்கை என வாழும் அண்ணன் களஞ்சியம் காதல் என்ற சொல்லை கெட்ட வார்த்தையாக நினைப்பவர். போலீஸ் ஸ்டேஷனுக்கு தஞ்சமடைய வரும் ஜோடிகளை அடித்து விரட்டும் முரட்டுக் காரர்.வறுமையின் காரணமாக அன்டை மாநிலத்திற்குச் சென்று திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க தீவிரமாக செயல்பட்டுவருகிறார். அந்த சமயத்தில் கண்ணனின் உயிர் நண்பன் ஒருவனை விசாரிக்கும்போது களஞ்சியத்தின் அடிதாங்காமல் இறக்கிறான்.
ஒருபுறம் காதல், மறுபுறம் உயிர் நண்பனின் இறப்பு நண்பனுக்காக பழிவாங்கப்புறப்புடும் கண்ணனின் காதல் என்னவானது என்பது க்ளைமாக்ஸ்! ‘LTTE’ என்ற எழுத்துக்கள் ‘யாழ்’ என மாறுவதும் டைட்டிலின் போது காண்பிக்கப்படும் ஒரு விளக்கவுரை கதை தளத்தை வேறு இடத்திற்கு கொண்டுசெல்லப்போகிறது என நினைத்தால் அது காதலுக்குள் செல்கிறது.
வறன்டபூமியையும் வனப்பாக காண்பிக்கும் கதிரவனின் கேமிராவை முத்தமிடலாம்! பாடல்களையும், காட்சிகளையும் காட்சிப்படுத்தியதில் நேர்த்தி. வைரமுத்துவின் பாடல்கள் பரவசம் இசையமைத்திருப்பவர் சாம்பசிவம். எடிட்டர் ஜெய் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் மெதுவாக செல்லும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். இமான் அண்ணாச்சியின் காமெடிக்காட்சிகள் அதை கொஞ்சம் தவிர்த்துள்ளது. ‘சும்மா’, ‘அதாவது’ என்ற ஒற்றைச் சொல் காமெடிக்காட்சிகள் சிரிக்கவைக்கின்றது.
அறிமுக நாயகன் கண்ணன், மண்ணுகேத்த நிறத்துடன். நிஜமான பட்டாள வீரனின் தோற்றம் கதாபாத்திரத்திற்கு பலம். அவருக்கேற்ற கதைகளை தேர்ந்தெடுத்தால் தமிழ்ச்சினிமாவிற்கு தவிற்க முடியாத ஹீரோவாகிவிடுவார். ஶ்ரீப்ரியங்கா அழகு. அளவான நடிப்பு. களஞ்சியம் தொடர்ந்து நடிக்கலாம். சில பல குறைகள் இருந்தாலும் சமீபத்தில் வெளிவந்த படங்களை ஒப்பிடும் போது எவ்வளவோ பரவாயில்லை! சினிமாத்தனமில்லாத க்ளைமாக்ஸ் கொடுக்க தனி தைரியம் வேண்டும் சபாஷ் கதிரவன்.
மொத்ததில்..
‘வானம் பார்த்த பூமியான அவனது இதயமெனும் பொட்டைக் காட்டில் கோடை மழையாய் அவளது நினைவுகள்’