திரைப்பட டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினரான மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை கவுரவிக்கும் விதமாக, டப்பிங் யூனியனின் செயற்குழு குழு கூட்டம் இன்று அதன் தலைவர் ‘டத்தோ’ ராதாரவி தலைமையில் கூடியாது இந்நிகழ்ச்சியில்,, மறைந்த எஸ்பிபியி ன் திருவுருவப் படம் திறந்துவைக்கப்பட்டது.
மேலும் டப்பிங் யூனியனுக்கென தனியே டப்பிங் ஸ்டுடியோ ஒன்று இசைத் துறைச் சாதனையாளரும் டப்பிங் கலைஞருமான எஸ்பிபி அவர்களின் நினைவாக விரைவில் திறக்கப்படும் என ராதாரவி தெரிவித்தார்.