தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களின் மருத்துவ காப்பீடுதிட்டத்தை நாளைமுதல் (அக்டோபர் 1ம் தேதி) நடைமுறை படுத்தவும், மேற்படி இன்ஷுரன்ஸ் நிறுவனம் பெயரில் காசோலை கொடுக்க உறுதி செய்வது குறித்தும், மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இதர விஷயங்கள் குறித்தும் கலந்துரையாடல் கூட்டம் இன்று காலை 10.00 மணி முதல் 10.30 வரை ஜூம் செயலி மூலம் நடந்தது.
இக்கூட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நல அறக்கட்டளை அதிகாரியுமான ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெய்சந்திரன் தலைமையில் நடந்தது.
இதில் பட அதிபர்கள் கலைப்புலி எஸ்.தாணு ,ராதாகிருஷ்ணன்,பிரிமுஸ் தாஸ்,டேவிட்ராஜ் ,பாலாஜி,இளம்பிறை மாறன் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பட அதிபர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், பட அதிபர்கள் 985 பேரின் குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீடு செய்து தரப்பட்டது. மருத்துவ காப்பீடு இன்று நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது .மேலும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் நவம்பர் மாதம் 22 ம் தேதி தேர்தல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.