பாபர் மசூதி இடிக்கப்பட்டது உலகுக்கே தெரியும். அது ஒன்றும் தானாக நடந்த செயலும் இல்லை. திட்டமிட்டே நடந்த குற்றச்செயல்.!
இந்த இடிப்பு தொடர்பாக அத்வானி ,உமாபாரதி ,முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அத்தனை பேரையும் சிபிஐ நீதி மன்றம் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என சொல்லி விடுதலை செய்து விட்டது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார்
“நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா?
திட்டமிட்ட செயலா?
நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது.” என்பதாக டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார் .சரிதானே?