Review
‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ பிரைவேட் லிமிடெட் சார்பில் பி.மதன் தயாரித்துள்ள படம் ‘மாப்ளே சிங்கம்’. இயக்குனர் எழிலின் உதவியாளர் N. ராஜசேகர் இயக்கியுள்ளார். ஏற்கனவே இணையதளத்திலும், டிவிடி’யிலும் திருட்டுத்தனமாக வெளியான இப்படம் அதிகாரப்பூர்வமாக (11.03.2016) இன்று வெளியாகியுள்ளது.
ஒன்றிரண்டு டெம்ப்ளேட் முகபாவனைகளை கொண்டிருக்கும் விமல், கவர்ச்சி நடிகை அஞ்சலி இருவரும் மீண்டுமொருமுறை சேர்ந்து நடித்துள்ள இப்படத்தை தியேட்டரில் போய் பார்க்கலாமா?
ஊருக்குள்ள தேர் இழுப்பதிலிருந்து தேர்தலில் நிற்பது வரை ராதாரவி கோஷ்டிக்கும், முனீஸ்காந்த் கோஷ்டிக்கும் காலகாலமாக பகை. இதில் ராதாரவி கோஷ்டியைச் சேர்ந்த விமலுக்கு ஆகப்பெரிய வேலை என்னவென்றால் காதல் செய்யும் காளையர்களை பிடித்து காயடித்து விடுவது, மற்ற நேரங்களில் ஊரைச்சுற்றுவதும் முழுநேரப்பணி. அவரின் கைத்தடிகளாக சூரி, காளிவெங்கட், ‘லொள்ளு சபா’ சாமிநாதன் & கோ.
இந்நிலையில் விமல், எதிர் கோஷ்டியிலிருக்கும் அஞ்சலியை பார்த்தவுடன் காதலுக்கு காவல்காரனாகிவிடுகிறார். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமென செல்லும் இவர்களின் காதலுக்கு இரன்டு கோஷ்டியிடமிருந்தும் பிரச்சனைகள் உருவாகிரது. அதை, எப்படி சமாளித்து இனைகிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்!
ஆரம்பக்காட்சியில் தேர்த்திருவிழா காட்சியைப் பார்க்கும்போது விறுவிறுப்பான ஒரு படம் என நினைப்பதற்குள் அடுத்தக்காட்சியே அப்படியில்லை எனச்சொல்லி வழக்கமான பார்த்துப்பழகிய. வழவழவென செல்லும் திரைக்கதை. லொடலொடவென இடம்பெறும் வசனங்கள் இந்த இரண்டு கிறுக்கு கோஷ்டிகளுக்கு மத்தியில் ரசிகர்கள் நெளிவதை தவிற்க்க முடியவில்லை!
சிக்கென வந்து மனதை சிக்கவைக்கிறார் அஞ்சலி. பாடல்கள் எல்லாம் திருவிழாக்கோலம். கண்ணுக்கு குளிர்ச்சி. தேனிமாவட்டத்தின் குளுமையை குளுகுளுவென படமாக்கியிருக்கிறார் தருண் பாலாஜி. சூரியின் காமெடியெல்லாம் சிறப்பு அவருடன் இனைந்து காளிவெங்கட், ‘லொள்ளு சபா’ சந்தானம் அதகளம் பண்ணியுள்ளனர். ‘கடி’க்கமெடிக்காக முனீஸ்காந்த். கடைசி மூணு ரீலுக்கு முன்னாடியே முடிஞ்சுபோன படத்தை மறுபடியும் நீட்டியிருக்கின்றனர்.
மொத்தத்தில் இந்தப் படத்தை தியேட்டருக்குத் தான் போய் பார்க்க வேண்டுமென்று அவசியமில்லே! அடுத்து விரைவில் வரவிருக்கும் பண்டிகையின் போது ஏதாவது ஒரு சேனலில் பார்த்துக்கொள்ளலாம்!
–