ஓரளவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள்.
இன்னும் 7 மாதங்கள்தான் இருக்கு எலக்சனுக்கு.! அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரவில்லை என்றாலும் அடுத்த மே மாதம் தேர்தல் நடக்கும் என்பது நிச்சயம். பிரளயம் ஏற்பட்டால் மட்டுமே அதில் மாற்றம் வரலாம்.அதாவது தள்ளிப்போகலாம்.
இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள். ஆதரவாளர்கள். எல்லா அரசியல் கட்சியினரும் எலக்சன் வேளைகளில் தீவிரம் காட்டி வருகிற நிலையில் ரஜினி நிஷ்டையில் இருப்பது போல் அமைதியாக இருக்கிறாரே!
நாட்டு நிகழ்வுகளில் அக்கறை இல்லாததுபோல் காட்டிக்கொள்கிறார். முக்கிய பிரச்னைகளில் அறிக்கைகள் எதுவும் வெளியிடுவதில்லை. உத்திரபிரதேசத்தில் தலித் பெண்களுக்கு நடந்து வரும் கோரத்தாக்குதல் பற்றி கவலைப்படவில்லை. அட்லீஸ்ட் டிவிட்டரிலாவது பதிவு போடலாம் .அதையும் செய்யவில்லையே என்கிற ஆதங்கம் ரசிகர்களுக்கு!
ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்சு கதையாகிவிடக்கூடாது என்பதில் அக்கறையுடன் நீந்துவதற்கு தயாராக நிற்பவர்கள் எவ்வளவு நாள்தான் கரையிலேயே நிற்பார்கள்.? ஆற்று தண்ணீர் வற்றிவிடும் பிறகு கடந்து விடலாம் என்று ரஜினி நினைக்கிறாரோ ?
அதனால்தான் “இப்ப வரலேன்னா எப்பவுமே வரமுடியாது “என்பதை ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். சூப்பர்ஸ்டார் என்ன நினைக்கிறாரோ?