கேரளத்தில் மட்டுமல்லாது தமிழகத்திலும் ரசிகர்களை பெற்றிருந்தவர் கலாபவன் மணி. இவரது தம்பி ஆர்.எல்.வி. ராமகிருஷ்ணன் . மணி பலகுரல் மன்னன் என்றால் தம்பி நல்ல டான்சர். நடிகர்.இவர் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார் .ஏன் ?எதனால் ?
இவர் கேரள சங்கீத நாடக அகாடமி நடத்துகிற ஆன் லைன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனு போட்டிருந்தார். அதாவது மோகினியாட்டம் ஆடுவதற்காக !
மனு நிராகரிக்கப்பட்டது.!
“தலித் ஒருவர் மோகினியாட்டம் ஆடுவது இழிவைத்தரும் என்றால் அதை கேரளத்தில் தடை செய்து விடுங்கள். கோவிலில் தலித் ஒருவர் அர்ச்சராகமுடிகிறது. அரசு இப்படி சட்டம் போட்டிருக்கிறபோது அதை திட்டமிட்டு எதிர்க்கிறவகையில் கேரள சங்கீத நாடக அகாடமியின் போக்கு இருக்கிறது . ராமகிருஷ்ணன் குணம் பெற்று திரும்பவேண்டும்.”என்று பிரபல நடிகர் ஹரீஸ் பெராடி அவரது கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.