அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம், க/பெ.ரணசிங்கம். ராமனாதபுரம் மாவட்டம் ,கீழத்தூவலில் நடந்த ஒரு உண்மை நிகழ்வு.
அரியநாச்சி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இது குறித்து ஐஸ்வர்யாராஜேஷ் கூறியதாவது,
‘க/பெ ரணசிங்கம்’ படத்தின் கதையைக் கேட்டவுடன், கண்டிப்பாக இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அந்தளவுக்கு கதையை இயக்குனர் விருமாண்டி ரொம்ப உணர்வுபூர்வமாகவும்,வசனங்களை சண்முகம் கத்திமுனை போன்று கூர்மையாகவும் எழுதியிருந்தார்.
ஒரு கதையே அந்த படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது என்பார்கள். இவர்கள் இருவரும் தான், அரிய நாச்சி கதாபாத்திரம் பேசப்படுவதற்கு காரணம்.
என்னுடன் நடித்த விஜய் சேதுபதி மற்றும் சக நடிகர்கள் என ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி.எனது திரையுலக வாழ்க்கையில் ‘க/பெ ரணசிங்கம்’ முக்கியமான படம். கொரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால் கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகி கொண்டாடப்பட்டு இருக்கும்.என்றாலும் தொடர்ச்சியாக நல்ல படங்களில் எனது பயணம் தொடரும்.இந்த அரியநாச்சி கதாபாத்திரம் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த அரியநாச்சியைப் போல் எத்தனையோ பேர் இங்கு வாழ்கிறார்கள்”.இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.