நடிகை தமன்னா, தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சமூக வலைதளத்தில் கடந்த மாதம் பதிவிட்டார்..அதே சமயம் தனக்கும் தனது வீட்டிலிருப்போருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என முடிவுகள் வந்திருப்பதாகவும் தமன்னா கூறி இருந்தார்.
இந்நிலையில், தற்போது தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.