இயக்குநர் பா.ரஞ்சித் ” அலறல் ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் .
ஜி.டி. புரொடக்ஷன்ஸ், மற்றும் ஜீவேதா ஃபிலிம்ஸ் ஆகிய இரண்டு பட நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது.
இதில் புதுமுகங்கள் நந்தினி கதாநாயகியாகவும், கிரி கதாநாயகனாகவும் மற்றொரு கதாநாயகியாக சாகித்யாவும், நடிகர் சாய் தீனா இரட்டை வேடங்களிலும், குழந்தை நட்சத்திரங்களாக பேபி – தன்யஸ்ரீ மாஸ்டர்கே. சுடர் நிலவன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப் படம் குறித்து அறிமுக இயக்குநர்கள் ம.ரூபநாதன் மற்றும் அ.பாரூக் ஆகிய இருவரும் கூறுகையில், “இப்படம் உண்மை சம்பவங்களின் தாக்கத்தில் பெண்ணியம் மற்றும் குழந்தை மனோதத்துவவியல் கருவாகக்கொண்டு திகில் மற்றும் அமானுஷ்யம் நிறைந்த கமர்சியல் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.