” ஆபீசர் ” என்ற பெயரில் தெலுங்கில், ஆக்சன் திரில்லர் படமாக வெளியாகிய படம்தான் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ” சிம்டாங்காரன் ” என்ற பெயரில் வெளியாக உள்ளது.இதில்,நாகார்ஜுனா கதாநாயகனாக நடித்துள்ளார்.அவருக்கு மகளாக பேபி காவியா அறிமுகமாகி இருக்கிறார். இவர்களுடன் மைரா ஷெரின், அன்வர்கான், ஷாயாஜி ஷிண்டே ஆகியோர் நடித்துள்ளனர்.
மும்பையில் நடக்கும் தொடர் கொலைகளுக்கு மும்பையின் போலீஸ் அதிகாரி பசாரி தான் காரணம் என சந்தேகத்தில் மும்பை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து அவர்மேல் விசாரணை கமிஷன் அமைக்கிறது. அவ்வழக்கை விசாரிக்க சென்னையை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சிவாஜி கணேசனை ( நாகர்ஜுனா ) நியமிக்கிறார்கள்.
பசாரிக்கு தண்டனை வாங்கி தரும் சிவாஜிகணேசன் குடும்பத்தை பசாரி அழிக்க சிறையில் இருந்தே முயற்சிக்கிறார். இறுதியில் சிவாஜி தனது குடும்பத்தை காப்பாற்றினாரா,இல்லையா? என்பதை சுவாரசியமான திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் ராம் கோபால் வர்மா.நாகார்ஜுனா
உதயம் படத்திற்கு பிறகு சுமார் இருபது வருடங்கள் கழித்து ராம்கோபால் வர்மா, நாகா ர்ஜுனா இருவரும் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் வசனம் எழுதி தமிழாக்கம் செய்துள்ளார் மே.கோ.உலகேசுகுமார்.இப்படத்தை விவிஜி புரடக்சன் சார்பாக மேட்டூர்.பா.விஜயராகவன் மற்றும் ரேணுகா மகேந்திரபாபு இணைந்து தயாரித்துள்ளனர்.ரவிசங்கர் இசையமைத்துள்ளஇப்படத்தின் டிரைலரை ‘அறம்’இயக்குனர் கோபி நயினார் வெளியிட்டுள்ளார்