லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்பு, இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோரது புதிய கூட்டணியில் பலவித கருத்து மோதல்களை தாண்டி உருவாகி வரும் புதிய படம் மாநாடு. இதில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடிக்கின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ள நிலையில், மாநாடு படப்பிடிப்புக்கு அரசு நிர்ணயித்த எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் நடிகர்,நடிகைகள் பங்கேற்க வேண்டும் என்பதால், இப்பபடத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பரில் மீண்டும் தொடங்க உள்ளது.
இந்நிலையில், கிடைத்த இடைவெளியை மிக சரியாக பயன்படுத்தி கொண்ட இயக்குனர் சுசீந்திரன்,குறுகியகால படைப்பாக,ஒரு அட்டகாசமான கிராமத்து கதையை சிம்புவிடம் சொல்ல,கதையைக்கேட்ட சிம்பு ஓ.கே செய்யலாம் என்று சொன்னது தான் தாமதம்,கிடைக்கிற கேப்புல ஒரு கெடாவையே வெட்டி விருந்து வைக்கிற சுசீந்திரன் சிம்பு கிடைச்சா விட்டு விடுவாரா என்ன ?.இதோ,திரு ஒளிப்பதிவில், இன்று முதல் திண்டுக்கல்லில் சூட்டிங் அமர்க்களமாக தொடங்கி விட்டார்.
இப் படத்தில் சிம்புவுடன் இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜெயம் ரவியுடன்ஜோடி சேர்ந்து பூமி படத்தில் நடித்துள்ள நிதி அகர்வால் சிம்புவுக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளாராம். இப் படப்பிடிப்பில் வருகிற 8 ஆம் தேதி முதல் சிம்பு கலந்துகொள்ள உள்ளார் என்கிறார்கள். அடுத்த 30 நாட்களில் இப்படத்தை முடிக்க படக்குழு முடிவு செய்து பம்பரமாகசுழன்று பணியாற்றி வருகிறது. முதல் காப்பி அடிப்படையில் சிம்பு சினி ஆர்ட்ஸ் பட நிறுவனத்துக்காக சுசீந்திரன் தயாரித்து இயக்குகிறார்.