நாடெங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக உத்திர பிரதேசத்தில் தலித் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு படுகொலைகள் அதிகமாகவே நடக்கின்றன.
இதை கண்டித்து போராட்டங்கள் நடத்தினாலும் போலீசை கொண்டு வன்முறைகள் வழியாக அடக்கவே பார்க்கிறார்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஹத்ராஸ் வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுலும், பிரியங்காவும் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அப்போது பிரியங்கா காந்தியின் குர்தாவை ஆண் காவலர் ஒருவர் பிடித்து தடுத்து நிறுத்தினார் .மிகவும் பிரபலமான நேரு குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லை. அவரது மேலாடையை ஆண் போலீஸ் அதிகாரியை வைத்து மான பங்கப்படுத்த முயன்றிருக்கிறார்கள். மேலதிகாரிகளின் உத்திரவு இல்லாமல் இந்த இழி செயல் நடந்திருக்க முடியாது. இதற்கு கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
.அந்தப் புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டார் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்,
தற்போது சொந்தக் கட்சிக்காரர்களே யோகியை கண்டிக்கத் தொடங்கியுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநில பாஜக துணைத் தலைவர் சித்ரா கிஷோர் வாக் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரியங்கா காந்தியின் ஆடையை தொட்டு அவரை தடுத்து நிறுத்திய போலீஸார் மீது உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வற்புறுத்தியிருக்கிறார்.
“ஒரு பெண் தலைவரின் ஆடையை ஆண் போலீஸ் எப்படி தொடலாம் என்றும் இது யார் கொடுத்த துணிச்சல்” எனவும் கேட்டிருக்கிறார்.