அதிமுகவை சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் எ.பிரபு. வயது 36.
இவர் திடீரென 19 வயதான சவுந்தர்யா என்கிற இளம்பெண்ணை இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இவர் பிராமண வகுப்பு. பிரபு தலித் . கலப்புத் திருமண சட்டப்படி இந்த திருமணம் செல்லும். ஆனாலும் அதிமுக அமைச்சர்கள் யாரும் வரவில்லை.
ஆனால் மணமகள் சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் “இந்த திருமணம் என் மகளை மிரட்டி பணிய வைத்து நடந்திருக்கிறது. பிரபுவுக்கும் என் மகளுக்கும் வயது வித்தியாசம் அதிகம் .அதனாலேயே எதிர்த்தேன் .மிரட்டி கடத்தி சென்று கல்யாணம் செய்திருப்பதால் நான் தீக்குளிக்கப்போகிறேன் “என்பதாக மீடியாவிடம் சொல்லியிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ .பிரபு இதை மறுத்து இருக்கிறார். “நாங்கள் இருவரும் காதலர்கள் .கல்யாணம் செய்து கொண்டோம் .யாரையும் மிரட்டவில்லை ” என்று சொல்லியிருக்கிறார். போலீசார் பெண்ணின் தந்தை மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.