புலி வருது புலி வருது என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் .கடைசியில் நிஜமாகவே புலி வந்து விட்டது.
எஸ்.! நடிகை காஜலுக்கு திருமணம் உறுதியாகி
விட்டது. கவுதம் கிச்சுலு என்கிற தொழிலதிபரை இந்த மாதம் கடைசியில் 30 ஆம் தேதி கை பிடிக்கப்போகிறார். மும்பையில் சிறிய அளவில் நடக்கிறது .எல்லாம் கொரானா பயம்தான் காரணம்.
ஒரு ஆறுதல் திருமணம் முடிந்த பின்னரும் நடிப்பார் என்கிற செய்தி.
தற்போது இப்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில்உலகநாயகன் கமல்ஹாசன் ஜோடியாகவும்,இந்தியில், மும்பை சாகா என்ற படத்திலும் ,நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ‘ஹே சினாமிகா’ படத்திலும் காஜல் நடித்துகே கொண்டிருக்கிறார்.
கடந்த ஒரு வருட காலமாகவே .35 வயதை தொட்டு விட்ட நடிகை காஜல் திருமணத்திற்கு தயாராகிறார்.அவருக்கு பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகின்றனர் என்கிற தகவல்கள் வெளியாகி வந்தது.
|