அப்பாடா ,தமன்னா ரசிகர்களின் பிரார்த்தனை ஒருவாறு நிறைவேறிவிட்டது சாமிகளே !
தமன்னாவுக்கு கொரானா என்றதும் துடித்துப்போய்விட்டார்கள் அவரது ரசிகர்கள்.
அங்கபிரதட்ஷணம என்ன ,மண் சோறு சாப்பிடுதல் என்ன ,தமிழ்நாடே கலங்கிவிட்டது என்று எழுத ஆசைதான் !
வெப் தொடர் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதராபாத் வந்த,நடிகை தமன்னாவுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து,உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானது.
உடனடியாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். குணமாகிவிட்டது.
சமூக வலைதளப் பக்கத்தில் அவரது பதிவு இது:
“நானும் எனது டீமும் எவ்வளவோ பாதுகாப்பாக இருந்தும், சற்றும் எதிர்பார்க்காத வகையில், எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் எனக்கு பாசிட்டிவ் என்றார்கள்.
சிகிச்சைஎடுத்துக்கொண்டேன். இப்போது கொரோனாவிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளேன்.சிகிச்சை காலம் சற்று கடினமாக இருந்தது. ஆனால் இப்போது நான் நன்றாக உணர்கிறேன்.இந்த தொற்றில் இருந்து நான் முழுமையாக மீண்டு விடுவேன் என்று நம்புகிறேன். என பதிவிட்டுள்ளார்.