- “இது பொறுப்பதில்லை -தம்பி !
- எரிதழல் கொண்டுவா
- கதிரை வைத்திழந்தான்-அண்ணன்
- கையை எரித்திடுவோம்!”
மாதரசி திரவுபதியை மான பங்கப்படுத்தி விட்டனர் என்பதை பார்த்த வீமன் அனல் பறக்க சொன்ன வார்த்தைகளை பாரதி பெரும்புலவன் கவிதையாய் வடித்திருந்தான்.
19 வயதான தலித் இளம்பெண் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டாள் உ.பி.யில் உள்ள ஹாத்ராவில் !
நாடே கொந்தளித்தது. கற்பழித்ததுடன் நில்லாமல் கழுத்தை நெரித்து ,முதுகெலும்பினை முறித்து கோரமாக கொலை செய்திருக்கிறார்கள். சவத்தை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே எரித்து அரசுக்கு விசுவாசமாக நடந்திருக்கிறார்கள்.
ஆனால் ,ஜவகர்லால் நேரு மருத்துவக்கல்லூரி அலிகார் -முஸ்லீம் பல்கலைக்கழக ஃபோரன்சிக் துறை “கற்பழித்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை ,கழுத்திலும் முதுகிலும் காயம் இருக்கிறது “என்பதாக தெரிவித்திருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டுள்ளோரின் பெற்றோர் சொல்லியிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
“அந்த பெண்ணின் சகோதரனே அடித்துக் கொண்டிருக்கிறான்”
ஒரு அரசு நினைத்தால் எதையும் செய்யலாம் ,உண்மையை மறைப்பதற்கு என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் !