உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த வாரிசு ஸ்ருதிஹாசன். இவரது நோக்கமே இசைப்பயணம்தான் என்றாலும் படங்களிலும் நடித்து வருகிறார். இங்கிலாந்து சென்று முறைப்படி இசையை கற்று இருப்பவர் .அப்பாவைப்போல இவரும் பாடுவார்.
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் ஜனநாதன் இயக்கிவரும் லாபம் படத்தில் நடித்து வருகிறார்.
கொரோனா லாக் டவுன் தளர்வுகள் காரணமாக ஒரு வழியாக 7 மாதங்களுக்கு பிறகு சென்னைக்கு அருகே இயக்குநர் ஜனநாதனின் லாபம் படப்பிடிப்பு நடந்தது .
உலகநாயகனின் வாரிசு ஸ்ருதிஹாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“லாபம் எனக்கு வித்தியாசமான கதைக்களமாக அமைந்தது. இயக்குநர் ஜனநாதன், விஜய்சேதுபதி என புதிய டீமில் என்னையும் அவங்க சேர்த்துக்கிட்டாங்க. வித்தியாசமான அனுபவமா இருந்தது. லாபம் என்னோட திரையுலக பயணத்தில் குறிப்பிடும் படியான படமாக அமையும்.
எனக்கு பின்னால் வந்த நயன்தாரா,ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகைகள் பலருக்கும் கதாநாயகியை மையப்படுத்தும் பட வாய்ப்புகள் நிறைய வருகின்றன.
“கமல்சாரின் மகள் என்ற விசிட்டிங் கார்டு வைத்துள்ள உங்களுக்கு ஏன் அந்த மாதிரி வாய்ப்புகள் அமையவில்லை” என கேட்கிறார்கள். முதலில் இந்த அணுகுமுறையே தவறானது.
எனக்கும் நிறைய வந்துருக்கு. கமல் மகள் என்பது எனக்கு ஒரு விசிட்டிங் கார்டு, அவ்வளவே.என்னை எனக்கு தெரியும். ஆனால் அதன்மேல் சாஞ்சு வேலைபாக்கணும்னு நினைப்பதில்லை. என் பயணம் என்னோட தனிப்பட்ட பயணம். அது அவங்களோட பயணம். அது நல்லாவும்,பாராட்டும் படியாவும் இருக்கு.
அவங்க வழியில் நான் பயணிக்க முடியாது. என் வழியில் அவங்க பயணிக்க முடியாது, ‘ஹீரோயின் ஓரியண்டட்’ சப்ஜெக்ட் அமைந்தது (நயன்தாரா,ஐஸ்வர்யாராஜேஷ்) அவங்களோட குட் லக்.
ஒரு பெண்ணா எனக்கும் சில உணர்வுகள் இருக்கு.என் உணர்வுகளை சரியான வழியில் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கு.சொல்ற விஷயங்கள் எனக்கு ஏற்று கொள்ளும் படியாக இல்லையென்றால், நான் அதில் கமிட் ஆக மாட்டேன்.
அவள் அப்படித்தான் பட ரீமேக்கில் நடிக்கிறீர்களா என கேட்கிறார்கள். பேச்சு வார்த்தை போய் கொண்டிருக்கிறது. முடிவு இன்னும் தெரியல.
பெண்ணியத்தை முன்னிலை படுத்துகிற மிக சிறந்த படங்களில் அவள் அப்படித்தான் படமும் ஓன்று. அந்த ‘மஞ்சு’ கேரக்டரை சிதைத்து விடாமல் படமாக்கினால் நல்லா இருக்கும். அப்படி இல்லையென்றால் அந்த கதையை தொடாமல் இருப்பதே நல்லது.
எனக்கு கல்யாணத்தில் நம்பிக்கை இருக்கா இல்லையா என்பதே ஒரு விஷயம் இல்லை. இப்போதைக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை .
எதிர்காலத்தில் என்ன நடக்கும்னு தெரியல.
அப்பா கட்சியில் சேருவீர்களா எனக்கேட்கிறார்கள்.எனக்கு அரசியல் பத்தி எதுவும் தெரியாது.ஆனால் அவரின் அரசியல் நடவடிக்கைகளை கவனித்து வருகிறேன்”.என்கிறார் ஸ்ருதிஹாசன்.
பலே ஸ்ருதியக்கா!