இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்கிற ஆபாசமான படம் அமோகமான வசூலித்த தந்தது என்பதை மறக்க முடியாது.
ஆபாசமாக தங்களைக்காட்டுவதற்கு நடிகைகள் வருகிறார்கள் .முந்தானையும் ரவிக்கையும் தங்களின் முன்னேற்றத்துக்கு தடைகள் என நடிகைகள் நினைக்கிறார்கள் .அப்படி ஆபாசமாக தங்களை போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு இப்படியெல்லாம் நடிக்கத்தயார் என்பதை ஜாடையாக உணர்த்துகிறார்கள்.
இதை ரசிப்பதற்கு ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் முன் வருகிறார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. உண்மையான நிலை இப்படி இருக்கிறபோது “இரண்டாம் குத்து” படம் இயக்குவதற்கு சந்தோஷ் ஜெய்குமாருக்கு கசக்கவா செய்யும்!
அண்மையில் வெளியிட்ட இரண்டாம் குத்து படத்தின் போஸ்ட்ரைப் பார்த்தபோது படு கேவலமாக இருந்தது.
இரண்டு நடிகர்கள் இரண்டு வாழைப்பழத்தை காட்டுவதைப்போல போஸ்டர்.! இதை பார்த்துவிட்டுத்தானோ என்னவோ இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு பயங்கர கோபம்.
“காமத்தை போதிக்கவா சினிமாவுக்கு வந்தோம்” என்று ஆவேசமாகியிருக்கிறார்.