டோவினோ தாமஸ் சிறந்த நடிகர்களில் ஒருவர் .
நடிகர் தனுஷின் மாரி -2 படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் .,
மலையாள படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில், வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்
இவர் மலையாளத்தில் மாயநதி, வைரஸ், லூசிபர், உயரே, கல்கி, அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டு, ஃபாரன்சிக், உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மலையாள இயக்குநர் ரோஹித் இயக்கத்தில் உருவாகி வரும் கலா படத்தின் சண்டைக்காட்சி ஒன்றில் நடிக்கும் போது, திடீரென எதிர்பாராதவிதமாக நடிகர் டொவினோ தாமஸுக்கு வயிற்றில் பலமாக அடிபட்டு இருக்கிறது.
வெளியே காயம் ஏதும் இல்லாத நிலையிலும், அவர் பயங்கர வலியால் கீழே விழுந்து கதறி துடித்தார். .இதையடுத்து பதறிப்போன படக்குழு அவரை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர்.
அங்கு நடிகர் டொவினோ தாமஸுக்கு வயிற்றுப் பகுதியின் உள்ளே ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது, இதையடுத்து டொவினோ தாமஸ் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். டொவினோ தாமஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில்,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் மலையாள திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.