தான் எழுதும் கதைகளில் வாழ்வின் எதார்த்தங்களை நிரப்பி, திரைக்கதையில் புதுமைகளை புகுத்தி அனைவரும் ரசிக்கும் வண்ணம் இயக்கி பலரது பாராட்டை பெற்றவர் இயக்குனர் எஸ்.ஆர் .பிரபாகரன்.
சுந்தர பாண்டியன், இது கதிர் வேலன் காதல், சத்ரியன் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் கொம்பு வைச்ச சிங்கம்டா படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் தற்போது பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்ஷன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இப்படத்தை தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார்.
கிரைம் த்ரில்லாராக உருவாகும் ‘பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்ஷ்ன்ஸ் No 1’ படத்தில் நடிகை தான்யா ரவிசந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிதான தோற்றத்தில் தான்யா ரவிசந்திரன் நடிக்கின்றார்.
நடிகர்கள் ஜெயபிரகாஷ் , ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ராம்நாத் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் ஆகியோரை இயக்குனர்.பிரபாகரன் அறிமுகப்படுத்தும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.