சில பேர் மொட்டை போட்டுக்குவாங்க. இதை தேர்தல் சமயத்தில் நிறைய எதிர்பார்க்கலாம்.
ஆனால் ஒரு படம் வெற்றி பெறலேன்னா நடிகர்கள் மொட்டை போட்டுக்கொள்வதாக சொன்னதில்லை. கதை தோத்துப்போச்சு என்று சொல்லி விட்டு அடுத்த படத்துக்கு ஆளை தேட ஆரம்பித்து விடுவார்கள்.
சரத்குமார் திருநங்கையாக நடித்திருந்த ராகவா லாரன்ஸ் இயக்கிய படம் தற்போது லட்சுமி பாம்ப் என்கிற பெயரில் தயாராகியிருக்கிறது. இந்தப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சரத்குமார் நடித்திருந்த கேரக்டரில் அக்ஷ்ய் குமார் நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் டிரெய்லரைப் பார்த்த நடிகர் புல்கிட் சாம்ராட் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “இந்த படம் ஹிட் அடிக்கலேன்னா நான் வளையல் போட்டுக்கிறேன் ” என்று பதிவு செய்திருக்கிறார்.