பன்ச் டயலாக் அடிப்பதில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனை அடிச்சிக்க ஆளே கிடையாது. ஜாடையாக ஒருவரை சொல்வதைப்போல மற்றவரை காலை வாருவதில் பலே புன்னகை மன்னன். சிரிக்காமல் சீரியஸாக சொல்லி மாட்டி விட்டுவிடுவார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிதானே அதில் எப்படி அரசியலை கலக்க முடியும் என்றுதானே நினைப்போம்?அந்த இடத்தில்தான் வசதியாக ஆப்பு அடிக்க அவருக்கு அதிக வசதி.!
“உப்பு போட்டு சாப்பிடவன் உள்ளே இருக்க மாட்டான்னு சொல்லிட்டு உள்ளேயே இருக்காரு ஒருத்தரு.. தேர்ந்தெடுக்கப்படாமலேயே தலைவராகிட்டு எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறவர் இன்னொருத்தர்” என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் சொன்னது நிகழ்ச்சியை சார்ந்த ஒரு பீப்பாயை சொல்லியிருந்தாலும் அதில் நாட்டு அரசியலும் இருக்கா இல்லையா?
இபிஎஸ்-ஓபிஎஸ் இருவருக்கும் பொருந்துகிறதா இல்லையா? கணக்குப்போட்டு பாருங்கள் சரியாத்தான் வரும்!