சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி
ஆகியோரது நடிப்பில் வெளியாகி கடும் எதிர்ப்பையம், சர்ச்சசையையும் ஏற்படுத்திய படம், இருட்டு அறையில் முரட்டுக் குத்து.பலரது முகச் சுளிப்புக்கு ஆளான இப்படம் இளசுகளால்திரையரங்குகளில் நன்றாகவே கல்லா க ட்டியது.ஆபாச பட இயக்குனர் என்ற முத்திரையும் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெய்குமாருக்கு குத்தப்பட்டது. இப்போது இதன் இரண்டாம் பாகம், ‘இரண்டாம் குத்து’ என்ற பெயரில் உருவாகி உள்ளது. இதை இயக்கி ஹீரோவாக நடித்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,மற்றும் டீசர் கிட்டத்தட்ட ஆபாசத்தின் உச்சமாகவே இருந்தது என்றே சொல்லலாம். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், இரண்டாம் குத்து படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள். எத்தனை கற்பழிப்புகள்? குழந்தைச் சிதைவுகள்? போதாதா? என ஏகத்துக்கும் குமுறி இருந்தார்.தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்ட இப்போஸ்டர் ஆங்காங்கே தற்போது பொது மக்களால் கிழிக்கப்பட்டும் வருகிறது.இந்நிலையில், பிரபல மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை அலிஷா அப்துல்லா, தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியுள்ளதாவது, “இரண்டாம் குத்து படத்தின் டிரைலரை பார்த்தேன். இதுபோன்ற திரைப்படங்களை பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது. இந்த மாதிரியான படங்களை எப்படி திரையிட முடியும்?இந்தப் படத்தை அரசு தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளவர் அதை தமிழக முதல்வர் அலுவலகத்துக்கு டேக் செய்து, இதுபோன்ற படங்களை தயவு செய்து தடைசெய்யுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Just seen the trailer of Irandam Kuththu .. seriously ! This is just sick to see such movies made!!!
How can such movies even release?
@CMOTamilNadu sir pls banned such films a humble request 🙏🏻 #ban— Alisha abdullah (@alishaabdullah) October 9, 2020