தமிழக சட்டப் பேரவைக்கூட்டம்.
முதல்வர் ஜெயலலிதா கொரானா மாஸ்க் போட்டுக்கொண்டு உட்கார்ந்து சபை நிகழ்ச்சிகளை கவனிக்கிறார். அதாவது தலைவி பட ரிகர்சல் நடக்கிறது. இயக்குநர் ஏ.எல் விஜய் மானிட்டரை பார்த்துக் கொண்டிருக்கிறார் .
“ஓகே டேக் போகலாம் “என்றதும் மாஸ்க்கை எடுத்து விட்டு நடிக்கிறார் கங்கனா ரனாவத்.
“ஜெயா அம்மா ஆசியுடன் தலைவி படத்தின் இன்னொரு செடியூலையும் முடித்து விட்டோம் “என்று கங்கனா டிவீட் பண்ணி படத்தையும் பதிவிட்டிருக்கிறார்.
இந்த படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார் விஷ்ணு இந்தூரி தயாரிக்கிறார்.