எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும்,ரெஜினா கஸாண்ட்ரா முக்கிய வேடத்திலும்இவர்களுடன், ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். . இப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது. ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது. இப்படம்,தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணிகளை தொடங்கி இருப்பதாக புகைப்படங்களுடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.