தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்தார்.
அப்போது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘இரண்டாம் குத்து’பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை குறித்து எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது, “மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் சென்சார் போர்டு உள்ளது .
ஆனாலும், ஆபாச பட காட்சிகளை நீக்குவதற்கு மத்திய அரசுக்கும், சென்சார் போர்டுக்கும் தமிழக அரசு வலியுறுத்தும். தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை சீரழிக்கும் எந்த படமாக இருந்தாலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்”. இவ்வாறு அவர் கூறினார்.