கடந்த சில வாரங்களாகவே அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பூ, காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருப்பதாகவும்,அக்கட்சியில் இருந்து விலகி,மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாகட்சியில் சேர போவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால்,நடிகை குஷ்பூ இத்தகவலை மறுத்து வந்தார்.சமீபத்தில்,தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்தபோது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், வடசென்னையில் நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டார். இந்நிலையில், இன்று மாலை குஷ்பு,தனது கணவர் சுந்தர்.சியுடன் விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாளை டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்திய புதிய கல்விக்கொள்கையை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தபோதும் குஷ்பு புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அவரிடம், ‘பாஜகவில் சேருவதற்காக டெல்லி செல்கிறீர்களா?’ நீங்கள் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளதே? என கேள்விகளை அடுக்கியதும், ‘நோ கமெண்ட்ஸ்’ என்று மட்டுமே பதிலளித்தாவாறு சென்று விட்டார்.