தென்னகத்து தலைவர்களில் தென்மாவட்ட மக்களிடம் ‘அஞ்சா நெஞ்சர் ‘ என்று பெயர் பெற்றவர். சுதந்திரப்போராட்ட வீரர். நேதாஜி போஸுடன் தொடர்பில் இருந்தவர். இதனால் இவரை தென்னாட்டு போஸ் என்பார்கள்.
ஆங்கில அரசினால் வாய்ப்பூட்டுச்சட்டம் போடப்பட்டவர். இவரைப்பற்றி ஆபிரகாம் லிங்கன் என்கிற பத்திரிகையாளர் ஒரு படம் எடுத்திருந்தார்.
தற்போது ஜெ,எம் ,பஷீர் நடிக்கும் ‘தேசியத் தலைவர்’ என்கிற பெயரில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் வாழ்க்கை நிகழ்வுகளை அரவிந்தராஜ் இயக்கப்போகிறார் இசைஞானி இளையராஜா இசை.தேசியமும் தெய்வீகமும் கலந்த வரலாறு. தேவர் பேசிய சில கேசட்டுகள் அருப்புக்கோட்டை பெருமாளிடம் இருந்தது. தேவருக்கு அடர்ந்த மீசையும் இருந்தது.
மிகவும் கவனமுடன் கையாளப்படவேண்டிய பதிவு. தேவருடன் இருந்த து.லா.சசிவர்ணத்தேவர் ,பி.கே,மூக்கையாத் தேவர் ,கண்ணகி சக்தி மோகன் ஆகியோரை விட்டு விட முடியாது, வழக்குரைஞர்களில் வேலாயுதன் நாயரும் பதிவு செய்யப்பட வேண்டியவர்.