பிரமாண்டமாக படங்கள் எடுப்பதில் ஏஜிஎஸ் நிறுவனமும் ஒன்று.
முன்னணி நடிகர்களுக்கு ஊதியங்களை உயர்த்தியதில் இந்த நிறுவனத்துக்கு முக்கியப்பங்கு உண்டு.
இந்த நிறுவனம் கடந்த 2006 தமிழ் திரையுலகில் திருட்டுப் பயலே படத்தின் வழியாக தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்தது .
தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம், மாசிலாமணி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், நேரம், மதராசபட்டினம், எங்கேயும் காதல், அவன் இவன், மாற்றான், இரும்புக்குதிரை, அநே கன், தனி ஒருவன், கவண், திருட்டுப்பயலே 2, பிகில் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து தமிழ் திரையுலகின் முன்னணி பட நிறுவனமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் இனிமேல் புதிய திரைப்படங்களை தயாரிப்பதில்லை என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு வெளியான படங்களிலேயே விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் தான் அதிகம் வசூலித்த படம் என படத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
அது மட்டுமின்றி பிகில் திரைப்படம் சுமார் ரூ.300 கோடி வரை வசூல் செய்ததாகவும் திரைத் துறை வட்டாரங்களில் பேசப்பட்ட நிலையில்,அப் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் பட நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து அந்த நிறுவனத்தின் அலுவலகம், மற்றும் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக அப்படத்தின் பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகம் என சுமார் 20 இடங்களில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர் இதனிடையே சுமார் 20 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ 25 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறை தரப்பில் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ஏஜிஎஸ் பட நிறுவனம் இனிமேல் படத்தயாரிப்பில் ஈடுபட போவதில்லை என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளதாக திரைத் துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது