விரைவில் கட்சி ஆரம்பித்து மக்களின் ஆதரவினைப் பெற்று ஆட்சியில் அமரப்போவதாக சொல்கிறவர் ரஜினிகாந்த்.
இவரது கல்யாணமண்டபம்தான் ராகவேந்திரா கல்யாண மண்டபம். வசதிபடைத்தவர்கள் மட்டுமே இந்த மண்டபத்தில் கல்யாணம் நடத்த முடியும். ஏனென்றால் அந்த அளவுக்கு கட்டணம் இருக்கிறது.
இந்த மண்டபத்துக்கு சொத்துவரி கட்டவேண்டும் என்பதற்காக சென்னை பெருநகர மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கட்ட வேண்டிய தொகை 6 . 50 லட்சம் .அதாவது ஆறரை லட்சம் .
இதை கட்ட வேண்டியதுதானே? மாநகராட்சிக்கு பதில் அனுப்பவே இல்லை ரஜினிகாந்த் !
“இந்த கல்யாண மண்டபத்தில் கடந்த 6 மாதகாலமாக கல்யாணமோ வேறு நிகழ்ச்சிகளோ நடக்கவில்லை. கொரானா காலம் ஆகவே வரியை ரத்து செய்ய வேண்டும் என்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கடந்த ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் மத்திய, மாநில அரசுகள் வித்த பொதுமுடக்கத்தால் மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்ததால் சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி தரப்பில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் இன்று விசாரிக்கிறார்.
இதற்கிடையில் அந்த மனுவை திரும்பப்பெறுவதற்காக ரஜினிகாந்த் நீதி மன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார் .
இதை விசாரித்த நீதிபதி கோர்ட்டு நேரத்தை வீணடிப்பதாக ‘மக்கள் தலைவர்’ ரஜினிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிற ரஜினிக்கு, அரசுக்கு ஆறரை லட்சம் வரி கட்டுவது அவ்வளவு சுமையா என்று மக்கள் கேட்கிறார்கள்.