கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகை காஜல் அகர்வாலுக்கு, தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவுடன் திருமணம் முடிவாகி விட்டது.,
வரும் 30 ஆம் தேதி மும்பையில் நடக்க இருக்கிறது
.இவரது திருமணம் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணத்தை நடத்த இருப்பதாகக் கூறப்பட்டது. ,கொரோனா பரவல் அதிகமாகி வருவதால், தற்போது மிகவும் எளிமையாக நடத்த காஜல் முடிவு செய்துள்ளார்.
இதனால், மும்பை மெரைன் டிரைவ் பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே மிகவும் எளிமையாக திருமணம் நடக்க இருக்கிறது.இதில் மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர்.
சினிமா துறையினருக்கும், நண்பர்களுக்கும் அழைப்பு இல்லை என்று கூறப்படுகிறது. கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இப்படியொரு முடிவை காஜல் எடுத்திருப்பதாக காஜல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.