இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், அயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோரது நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் கல்லா கட்டியதோடு, சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகளையும் அள்ளியது ‘அந்தாதுன்’. பிளாக் காமெடி கிரைம் திரில்லர் படமான இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கி இருந்தார். இதில் பிரசாந்த் ஹீரோவாக நடிப்பதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதையடுத்து பிரசாந்தும் கணிசமாக கூடியிருந்த தனது உடல் எடையை இப் படத்துக்காக,சுமார் 22 கிலோ வரை குறைத்திருந்தார்.அந்தாதுன் கதை, பியானோ மாஸ்டரை பற்றியது. நடிகர் பிரஷாந்த், பியானோ கற்றவர் என்பதால் அந்த கேரக்டருக்கு மிகச் சரியாக பொருந்துவார் என்றும் கூறப்பட்டது. ஏற்கனவே தியாகராஜன் கூறியிருந்தார்.
இதையடுத்து, சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியான பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜெ.ஜெ.பிரட்ரிக் இப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் கார்த்திக்கும், யோகிபாபு, ஆட்டோ டிரைவர் வேடத்திலும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் கதாநாயகி இன்னும் முடிவாகாத நிலையில், கடந்த 1998 ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஜீன்ஸ்’ படத்தில் பிரசாந்த் ஜோடியாக ஐஸ்வர்யாராயிடம் படக்குழுவின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.