வேலியில போற ஓணானை எடுத்து….. விட்ட கதையாக அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கி வரும் நடிகை கங்கனா, சமீபத்தில் தங்களது வாழ்வாதார உரிமைக்காக போராட்டம் நடத்திய விவசாயிகளை, தீவிரவாதிகள் என தனது சமூக வலைதளபக்கத்தில் ‘டுவீ’ட் டிய நடிகை கங்கனா ரனாவத்துக்கு எதிராக கர்நாடக விவசாயிகள் அனைவரும் கொதித்தெழுந்தனர்.
இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக கங்கனா மீது எஃப்.ஐ.ஆர் மற்றும் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளாத கங்கனா, தான் நடித்து வரும் புதிய பட படப்பிடிப்புகளில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழில் கங்கனா ரனாவத் நடித்து வரும் . தலைவி படத்தின் படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், தலைவி படத்திற்காக ஏற்றிய 20 கிலோ எடையை குறைத்து தற்போது மீண்டும் ஸ்லிம் நாயகியாக மாறி விட்டார். தனது ஸ்லிம் உடல் கட்டுடன் யோகா செய்யும் புகைப்படத்தை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.வழக்கம் போலவே இப்புகைப்படங்களும் தாறுமாறாக வைரலாகி வருகிறது.