“காதலிக்க நேரமுண்டு ,காதலனும் கையில் உண்டு ” என்று பாடிக்கொண்டிருக்கிறார் நடிகை லட்சுமி மேனன்.
கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, கொம்பன், வேதாளம், உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன். கேரளா நடிகை.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு கடுமையுடன் பதில் சொன்னவர்தான் இந்த லட்சுமி மேனன்.
” பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போய் பாத்திரம் கழுவவும், டாய்லட்டை சுத்தம் செய்யவும் விரும்பவில்லை” என்று பொளேர் என ஒரு போடு போட்டார்.
“நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டியதுதானே . சினிமாவை விட்டு விலகிவிடுங்கள்” என்று அவரது இன்ஸ்டாவில் ஒருவர் பதிவிட்டு இருந்தார்.
ரசிகர் ஒருவர் “நீங்கள் காதலிக்காமல் தனியாகவாக இருக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டார்.. லட்சுமி மேனன்,போட்டாரே ஒரு போடு !
“நான் தனியாக இல்லை”
அப்படியானால் அவரின் காதலர் யார்? விரைவில் கல்யாணமா? என சில கேள்விகள் எழுகின்றன.