“ஒல்லி ஜெயலலிதா போர்சன்லாம் முடிஞ்சிருச்சு. இனி உடம்ப ஏத்தணும் .எப்படியும் 20 கிலோ கெய்ன் பண்ணனும்”என்கிறார் தலைவி பட கதாநாயகி கங்கனா.
ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் வளரும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறவர் கங்கனா . ஆரம்பகால ஜெ.வாக நடிப்பதற்காக உடல் இழைத்தவர் தற்போது எடையை கூட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.
“இதற்காக 20 கிலோ எடை கூட்டணும்.இதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் படம் ஏறத்தாழ முடிந்து விட்டது என்று சொல்லலாம் “என்கிறார். கங்கனா