“மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம் .கங்கையே சூதகமானால் ?”
தென்னகத்தைச்சேர்ந்த பிரபலமான தலைவர் தனது உரையின்போது பயன்படுத்திய சொல்.
தற்போது நீதிபதியே ஒரு சார்பாக நடக்கிறார் என்பதாக அரசு தரப்பு குற்றம் சாட்டியிருக்கிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நடிகையை காருக்குள் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஒரு வழக்கு.
அந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.சிறையில் அடைக்கப்பட்டார்.பின்னர் ஜாமினில் வெளியில் வந்து படங்களில் நடிக்கத்தொடங்கிவிட்டார்.
வழக்கு முடிந்த பாடாக இல்லை.இந்த வழக்கில் பிறழ் சாட்சியாக நடிகர்கள் பாமா ,சித்திக் ஆகியோர் மாறிவிட்டனர் .அவர்கள் முதலில் கொடுத்த வாக்குமூலத்தில் உறுதியுடன் நிற்கவில்லை.இதை நடிகை ரேவதி கடுமையாக கண்டித்தார்.
இந்த வழக்கில் எட வேல பாபு ,பிந்து பணிக்கர் ஆகியோரும் பிறழ் சாட்சியாகிவிட்டனர். விபின்லாலுக்கு எர்ணாகுளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து கொலை மிரட்டல்கள் வருவதாக சொல்லி புகார் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் நீதிபதி ஒரு சார்பாக நடக்கிறார் .எனவே வழக்கினை வேறு கோர்ட்டுக்கு மாற்றுங்கள் என்று அரசு வழக்குரைஞர் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
நீதிபதி மீது அரசுக்கே நம்பிக்கை இல்லை.!!!