மனிதனுக்கு எப்படியெல்லாம் நோய் வருகிறது?
ஏழை பணக்காரன் என பார்த்து பற்றிக்கொள்வதில்லை கொடிய நோய்!
பாலிவுட் நடிக நடிகைகளுக்கு புற்று நோய் வரவில்லையா? மாண்டு போக வில்லையா? மறு ஜென்மம் எடுத்ததில்லையா?
இதோ இன்னொரு உதாரணம்.
பாலிவுட்டில் பிரபலமானவர் அனில் கபூர். போனிகபூரின் தம்பி. பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருப்பவர், இவர் கடந்த பத்தாண்டுகளாக குதிகால் தசைநார் தொடர்பான கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களால் விரைவாக நடக்க முடியாது ,ஓட முடியாது ,குதிக்க முடியாது! எப்படி நடிக்க முடியும்? 40 ஆண்டுகால திரை வாழ்க்கையை தொடரமுடியவில்லை. காரணம் நோய்.
பத்து ஆண்டு கால போராட்டம்.
உலகின் பிரபலமான டாக்டர்களை ,நிபுணர்களை பார்த்தார். ஒரே வழி “அறுவை சிகிச்சைதான்” என சொல்லிவிட்டனர். ஆனால் டாக்டர் முல்லர் என்பவர் “அறுவை சிகிச்சை தேவையில்லை” என சொல்லி “புத்துணர்வு சிகிச்சையே போதும் என சொல்லிவிட்டார்.
நம்பிக்கைதானே வாழ்க்கை.! இன்று அனில்கபூர் ஓடுகிறார் குதிக்கிறார் .எல்லாம் புத்துணர்வு சிகிச்சைதான். தனக்கு சிகிச்சை அளித்த டாக்டருடன் இன்ஸ்ட்டாவில் பதிவு செய்திருக்கிறார்.!