நடிகர் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு சரத்குமார், ராதாரவி ஆகியோர் சங்க பொறுப்பிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கினர். சங்கம் குறித்த எந்த வேலைகளிலும் ஈடுபடுவதில்லை.இதையடுத்து, சரத்குமார் சமீபத்தில் சங்க கணக்கு,வழக்கில் ஊழல் செய்ததாக பூச்சி முருகன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். இந்நிலையில், திடீரென்று சரத்குமார், ராதாரவி ஆகியோரை நடிகர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளனர். இச்சம்பவம் கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.