இது தாண்டா போலீஸ்உள்பட பல படங்களில் நடித்துள்ள டாக்டர் ராஜசேகர், நடிகை ஜீவிதா குடும்பத்தினர் கொரோனா வைரஸ் காரணமாக தனியார் மருத்துவ மனை ஒன்றில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
இது குறித்து டாக்டர் ராஜசேகர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,
” எனக்கு கொரோனாதொற்று அறிகுறி தென்பட்டதால் உடனடியாக நானும் என் மனைவி நடிகை ஜீவிதா மகள்கள் ஷிவானி ,ஷிவாத்மிகா ஆகியோர் கொரோனா சோதனை செய்து கொண்டோம்
எங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம்.என் மகள்கள் ஷிவானி ,ஷிவாத்மிகா ஆகியோர் குணமாகி , வீடு திரும்பி விட்டனர்.
தற்போது நானும் ஜீவிதாவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம் என்பது உண்மை.தான்.தற்போது சிகிச்சையின் காரணமாக ஜீவிதாவும் நானும் மிகவும் நன்றாக உணர்கிறோம், விரைவில் வீடு திரும்புவோம்!”இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.